Last Updated : 18 May, 2021 03:11 AM

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

மே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது

மே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது.

மே 10: தமிழகச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 11: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

மே 12: தமிழகச் சட்டப்பேரவையின் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

மே 12: தமிழகச் சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும், தமிழக அரசு கொறடாவாக கோ.வி.செழியனும் நியமிக்கப்பட்டனர்.

மே 13: இந்திய ராணுவத்தில் முதன்முறையாகக் காலாட்படை பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டனர். 1990 முதல் பெண்கள் அதிகாரி நிலையில் மட்டுமே பணியமர்த்தப் பட்டுவந்தனர்.

மே 14: ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவிருந்த சிங்கப்பூர் பாட்மிண்டன் ஓபன் ரத்து ஆனதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியாவின் சாய்னா, காந்த் ஆகியோர் இழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x