Published : 18 May 2021 03:11 am

Updated : 18 May 2021 03:11 am

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் - முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி : ஓபிஎஸ், பழனிசாமி அறிவிப்பு

சென்னை

கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடியும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும்.


மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களை தாக்கிய நேரத்தில் கடந்த ஆண்டு அதிமுக சார்பில் தமிழக அரசிடம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது. இப்போது அரசிடம் அதிமுக சார்பில் வழங்கப்படும் ரூ.1 கோடி மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றுடன் ஆங்காங்கே அதிமுகவினர் தங்கள் பகுதிகளில் அல்லல்படும் மக்களுக்கு கொடைக்கரம் நீட்டி, அவர்களின் துன்பத்தை துடைக்க வேண்டும்.

எம்ஜிஆரின் கொள்கை வழி நின்று, நிவாரணப் பணிகளில் அதிமுகவினர் அக்கறை கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x