Published : 18 May 2021 03:12 am

Updated : 18 May 2021 03:12 am

 

Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

புதுப்பட்டினத்தில் கடலுக்கு செல்லாத மீனவர்கள் :

புதுப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள சிறிய வகை படகுககள்.

கல்பாக்கம்

சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சிறிய கட்டுமரம் மற்றும் ஃபைபர்படகுகள் மூலம் கடலில் மீன்களைப் பிடித்து, விற்னை செய்து வந்தனர். இந்நிலையில், வெளி நபர்கள் மீன்களை வாங்க மீனவக் குப்பங்களுக்கு வருவதாலும், அவர்கள் மூலம் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தாலும் சிறிய படகுகள் மூலம் மீன் பிடிப்பதை மீனவர்கள் நிறுத்தியுள்ளனர். மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடலுக்குச் செல்வதில்லை என்றும் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.


இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "மீன்பிடித் தடைக்காலம் என்பதால், பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக் செல்வதில்லை. எனினும், சிறிய கட்டுமரம் மற்றும் சிறிய ஃபைபர் படகுகள் மூலம் குறிப்பிட்ட தொலைவு கடலுக்குச் சென்று, மீன் பிடித்து வந்தோம். இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை ஏல முறையில் விற்பனை செய்துவந்தோம்.

இந்த மீன்களை வாங்க வெளியாட்கள் மீனவக் குப்பங்களுக்கு வந்து செல்வதாலும், சிறிய சந்தைகளுக்கு மீன்களை எடுத்துச் செல்ல ஊரடங்கு தடையாக இருப்பதாலும், மீன்களைப் பிடிப்பதை தவிர்த்துள்ளோம். இதனால் கடலுக்குச் செல்லாமல், கரைகளில் படகுகளை நிறுத்தியுள்ளோம்" என்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x