Published : 17 May 2021 03:12 am

Updated : 17 May 2021 03:12 am

 

Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

காங்கிரஸ் மூத்த எம்.பி. ராஜீவ் சதவ் கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு : சோனியா, ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல்

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சதவ் கரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ‘‘இது மிகப்பெரிய இழப்பு’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சதவ்.ராகுல் காந்தியின் மிக நெருங்கிய நண்பராக விளங்கியவர். இவர்திடீரென புதிய வகை கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதுகடந்த 9-ம் தேதி கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஜகாங்கீர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றில் இருந்து சற்று அவர் குணமடைந்த நிலையில், திடீரென அவருடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.


இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று அதிகாலை 4.58 மணிக்கு ராஜீவ் சதவ் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறும்போது, ‘‘காங்கிரஸ் எம்பி. ராஜீவ் சதவ், புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து படிப்படியாக குணமடைந்து வந்தார். ஆனால், மறுபடியும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது’’ என்று தெரிவித் தார்.

ராஜீவ் சதவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி உட்பட தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரி வித்துள்ளனர். சோனியா காந்திவெளியிட்ட செய்தியில், ‘‘காங்கிரஸில் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர் ராஜீவ் சதவ். எல்லோருக்கும் நண்பராக இருந்தவர். இளம் வயதில் அவர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கூறும் போது, ‘‘ராஜீவ் சதவ் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். எனது நண்பரின் இழப்பு மிகப்பெரியது’’ என்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜீவ் சதவ், குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கட்சியில் துடிப்புடன் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x