Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

கரோனா வைரஸ் பரவலை தடுக்க - வீடு வீடாக பரிசோதனை நடத்த வேண்டும் : உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பரிசோதனை நடத்த வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவில் நாள்தோறும் 10,000 முதல் 15,000 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. பிப்ரவரி மத்தியில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தினசரி வைரஸ் தொற்று உச்சத்தை தொட்டது. ஏப்ரல், மே மாதத்தின் சில நாட்களில் புதிய தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

கடந்த சில நாட்களாக தினசரி வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் புதிதாக 3.26 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத் துறை, உள்துறை, நிதி ஆயோக் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கரோனா பரவல் தடுப்புக்காக இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

வாரத்துக்கு 1.3 கோடி பரிசோதனை

"கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வாரத்துக்கு 50 லட்சம் கரோனா பரிசோத னைகள் நடத்தப்பட்டன. தற்போது ஒரு வாரத்தில் 1.3 கோடி பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தினசரி வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரு கிறது. கரோனாவில் இருந்து குண மடைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத் துறை ஊழியர்களின் தீவிர நடவடிக்கைகளால் தற்போது 3.5 லட்சத்துக்கும் கீழாக குறைந்திருக்கிறது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தொற்று, பரிசோதனை, ஆக்சிஜன் இருப்பு, சுகாதார உள்கட் டமைப்பு, தடுப்பூசி திட்டம் தொடர்பான அதிகாரிகளின் விரிவான விளக்கத்தை கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஆஷா, அங்கன்வாடி ஊழியர்களை ஆக் கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் கிராமங் களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பிராந்திய மொழியில் தகவல்

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் உள்ளூர் அளவில் சிறந்த திட்டங்களை தீட்டி திறம்பட செயல் படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு நடைமுறைகள், சிகிச்சை நடைமுறைகள் குறித்து அந் தந்த பிராந்திய மொழியில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

தேவையுள்ள அனைத்து பகுதி களுக்கும் தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கிராமங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆக்சிஜன் கான்சென்ரேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது.

பயனற்ற நிலையில் வென்டிலேட்டர்கள்

மத்திய அரசால் வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பல்வேறு மாநிலங் களில் பயனின்றி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வென்டிலேட்டர், ஆக்சிஜன் கான்சென்ரேட்டர்களை திறம் பட கையாள்வது தொடர்பாக சுகாதார ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு எத்தனை வென்டிலேட்டர்கள் வழங்கப் பட்டுள்ளன. அவற்றில் எத்தனை பயன் பாட்டில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் மருத்துவ உபகரணங்களை இயக்க முடியும். நோயாளிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும்.

விஞ்ஞானிகள், நிபுணர்களின் வழி காட்டுதல், ஆலோசனையின்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். இதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மாநில அரசுகளோடு இணைந்து கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x