Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM

இன்று முதல் ஆவின் பால் விலை குறைப்பு :

வேலூர்: ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று (மே-16) முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. அதன்படி, வேலூர் ஆவினில் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.43-ல் இருந்து ரூ.40-ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.47-ல் இருந்து ரூ.44-ஆகவும், நிறை கொழுப்பு பால் லிட்டர் ரூ.51-ல் இருந்து ரூ.48-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x