Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

உயர் நீதிமன்றத்தில் தற்காலிகமாக - 17 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் :

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்புடைய வழக்கறிஞர்கள் தங்களது அரசுவழக்கறிஞர் பதவியை ராஜினாமாசெய்தனர். அரசு தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞரும், முன்னாள் திமுக எம்.பி.யுமானஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமதுரை கிளையில் அரசு தொடர்புடைய முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதற்காக தற்காலிகமாக 17 வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதிட வழக்கறிஞர்கள் பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி.ஹர்ஷா ராஜ்,எஸ்.ஜான் ஜெ.ராஜா சிங், ஏ.ஷப்னம் பானு ஆகியோரும், குற்றவியல் தொடர்பான வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் ஏ.தாமோதரன், ஆர்.முனியப்பராஜ், ஜெ.சி.துரைராஜ், இ.ராஜ்திலக், எல்.பாஸ்கரன், ஏ.கோபிநாத் ஆகியோரும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உரிமையியல் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதிட மூத்த வழக்கறிஞர் வீராகதிரவன், வழக்கறிஞர்கள் பி.திலக்குமார், ஆர்.பாஸ்கரன்,ஏ.கே.மாணிக்கம் ஆகியோரும், குற்றவியல் தொடர்பான வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் எஸ்.ரவி, எம்.முத்துமாணிக்கம் ஆகியோரும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் பதவிகளுக்கு நிரந்தரமாக புதியவர்கள் நியமிக்கப்படும் வரைஇவர்கள் இப்பதவி வகிப்பர்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x