Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13பேருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ்அந்தஸ்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரதீப் வி.பிலிப்சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ்அகாடமி இயக்குநராகவும், கூடுதல் டிஜிபி கே.ஜெயந்த் முரளிஆயுதப்படை கூடுதல் டிஜிபியாகவும், கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஜி.யான எச்.எம்.ஜெயராம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராகவும், ஐ.ஜி.யான ஆர்.தினகரன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகவும், ஐ.ஜி.யான லோகநாதன் ஆயுதப்படை ஐ.ஜி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.பி. மூர்த்தி சேலம் குற்றம்மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராகவும், எஸ்.பி.செந்தில் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள காவலர்பயிற்சி பள்ளி முதல்வராகவும், எஸ்.பி.யான எஸ்.எஸ்.மகேஷ்வரன் மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாகவும், ஏஐஜி அருளரசு டிஜிபி அலுவலகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு ஏஐஜியாகவும், எஸ்.பி. சரவணன் நிர்வாகப் பிரிவு ஏஐஜியாகவும்,எஸ்.பி.யான சி.ராஜா வணிக குற்றப் புலனாய்வு பிரிவு சிஐடிஎஸ்.பி.யாகவும், எஸ்.பி.யானடி.பி.சுரேஷ் குமார் சென்னையில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாகவும் (பிரிவு 2) பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

தவிர, தென் மண்டல (மதுரை) கூடுதல் டிஜிபி ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி எஸ்.ராஜேந்திரன் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த டி.எஸ்.அன்பு தென்மண்டல (மதுரை) ஐ.ஜி.யாகவும், மத்திய மண்டலம் (திருச்சி) ஐ.ஜி.யாக இருந்த தீபக் எம்.தாமோதர் கோவை காவல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த பவானீஸ்வரி சிறப்பு புலனாய்வு பிரிவு செல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாகவும், திருநெல்வேலி ரேஞ்ச் டிஐஜி பிரவீன் குமார் அபிநபு லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் வித்யாஜெயந்த் குல்கர்னி லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x