Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கரோனா ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு வல்லுநர் குழு வேண்டுகோள்

மதுரை

கரோனா ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என வல்லுநர்களுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ‘நாட்டை காப் போம்' அமைப்பு சார்பில் கரோனா தடுப்பு குறித்து சமூக ஆய்வாளர்கள், சமூகச் செயற்பாட் டாளர்கள், முக்கியத் துறை வல்லுநர்களுடான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. ராஜன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட பேராயருமான அந்தோனி பாப்பு சாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், வழக்கறிஞர் லஜபதிராய், மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, மனித உரிமை கல்விக் நிறுவன இயக்குநர் தேவசகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ராஜன் கூறியதாவது: தமிழகத்தில் கரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். இந்த இயக் கத்தின் மூலம் கரோனா பரவலைத் தடுக்க கூட்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

கரோனா பரவலைத் தடுக்க ஊராட்சி அடிப்படையிலான மக்கள் இயக்கம், மக்களின் வாழ்வதாரத் தேவைகளை நிறை வேற்றல், மக்களிடம் தன்னம் பிக்கையை அதிகரிப்பது, சிறப்பு சட்டப் பேரவை அமர்வைக் கூட்டுவது, தமிழக மக்கள் கரோனா நிதி திட்டம், கரோனா தன்னார்வப் படை, சுகாதார வளங்களைக் கூட்டுதல், சுகா தார வளங்களுக்கான விலை களை நிர்ணயித்தல், நாட்டு மருத்துவத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், மக்கள் உணர்வு களை மதிக்கும் நட்புமிகு நிர் வாகத்தை ஏற்படுத்துதல், தகவல் மற்றும் கண்காணிப்பு மையம் உருவாக்குதல், அரசு ஊடக நட்புக் கொள்கையை வகுத்தல், டாஸ் மாக் கடைகள் திறக்கும் நாளின் எண்ணிக்கைையைக் குறைத்தல் ஆகிய 15 செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு புதிதாக நாடாளுமன்றம் கட்டுவதை நிறுத்தி விட்டு, அதற்கான பணத்தை கரோனா நிவாரணத்துக்குப் பயன் படுத்த வேண்டும். பிரதமர் பரா மரிப்பு நிதியிலிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நியாயமான பங்கு தொகையை வழங்க வேண்டும், கரோனா தொடர்பான அனைத்து சுகாதாரப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x