Published : 14 May 2021 03:12 am

Updated : 14 May 2021 03:12 am

 

Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4.8 டன் ஆக்சிஜன் உற்பத்தி : நெல்லை அரசு மருத்துவமனைக்கு விநியோகம்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ். படம்: என்.ராஜேஷ்

ரெ.ஜாய்சன் தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் எடையுள்ள திரவ ஆக்சிஜன் முதன்முதலாக நேற்று காலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

கரோனா தொற்றின் 2-வது அலையால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத் தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற் பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது. தமிழக அரசும் இதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியது.


அங்கு ஒரு வாரமாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான 7 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவினர், அங்கு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. 4.8 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதை ஏற்றிக் கொண்டு முதலாவது டேங்கர் லாரி நேற்று காலை 7.10 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. லாரியை ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

98.6% தூய்மையானது

இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது,” பரீட்சார்த்த முறையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜன் முதல்கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 தினங் களுக்குள் நாளொன்றுக்கு 5 முதல் 10 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். பின்னர் இந்த அளவு படிப்படியாக அதி கரிக்கப்பட்டு முழு கொள்ளளவான 35 மெட் ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும். தற்போது தயார் செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆய்வகப் பரிசோதனையில் 98.6 சதவீதம் தூய்மை யானது என உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஸ்டெர்லைட் நன்றி

இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் நிறு வனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெருக் கடியான இந்த நேரத்தில் எங்கள் ஆலை யில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது, தினமும் 2 டேங்கர் லாரிகள் மூலம் திரவ ஆக்சி ஜனை விநியோகம் செய்யவுள்ளோம். ஆக் சிஜனை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லத் தேவையான நட வடிக்கைகளை தொடர்புடைய அமைப்பு களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறோம். ஆக்சிஜன் உற்பத்திக்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கூறும்போது, ‘‘ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத் தியை தடையின்றி மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” என்றார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1,240 படுக்கைகள் உள்ளன. இதில், 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருக்கிறது. திருச்சியில் இருந்தும், மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்தில் இருந்தும் இங்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் நேற்று இங்கு நிரப்பப்பட்டது. அப்போது, மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

29 :

இன்றைய செய்தி

More From this Author

x