Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

துணைத் தலைவராக பொறுப்பேற்றார் கு.பிச்சாண்டி - தமிழக சட்டப்பேரவை தலைவராக மு.அப்பாவு பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி தமிழக முதல்வ ராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச் சர்களும் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து 16-வது சட்டப்பேரவை யின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்கப் பட்ட கு.பிச்சாண்டி பதவிப் பிர மாணம் செய்து வைத்தார்.

சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் மே 12-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவான மு.அப்பாவு, துணைத் தலைவர் பதவிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவான கு.பிச்சாண்டி ஆகி யோர் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை.

இந்நிலையில், 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது பேரவை தற்காலிக தலை வர் கு.பிச்சாண்டி, ‘சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு மு.அப்பாவு தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்று அறிவித்தார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேஜை யைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சித் தலை வர் பழனிசாமி ஆகியோர் மு.அப்பாவுவை அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவராக அவை நடவடிக்கைகளை கவனிக் கத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அப்பாவு, ‘‘சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச் சாண்டியைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார்’’ என்று அறிவித்தார். பேரவைத் தலைவர் முன்னிலையில் கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரை வாழ்த்தி அவை முன்னவர் துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள் பேசினர்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி: மக்களாட்சி தத்துவத்தில் ஜனநாயகத்தின் இதயம் சட்டப் பேரவை. ஜனநாயகத்தின் முக்கிய மான 3 தூண்களில் முக்கியமானது சட்டப்பேரவை. பெரும்பான்மை பெற்ற கட்சி சார்பில் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். ஆனாலும், தேர்வான பிறகு பேர வைத் தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆசிரியராக இருந்து மாணவர்களை வழிநடத்தியவர் பேரவைத் தலைவராக ஆகியிருக் கிறார். எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்புகளை பேரவைத் தலைவர் அளிக்க வேண்டும். பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல் பட அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக் கும். பேரவை துணைத் தலைவ ராகியுள்ள கு.பிச்சாண்டிக்கும் வாழ்த்துகள்.

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்): ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற சார்பு நிலை இல்லாமல், ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றி அனை வருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதோடு, ஆளும் கட்சிக் கும், எதிர்க்கட்சிக்கும் பாலமாக பேரவைத் தலைவர் செயல்பட வேண்டும். ராதாபுரம் தொகுதியில் இருந்து வென்றாலும் 234 தொகுதி களும் பேரவைத் தலைவரின் தொகுதிகளே. தேசிய பாரம் பரியமும், திராவிட பாரம்பரியமும் கொண்ட கலவையான அப்பாவுக்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள். அமைச்சராக, சட்டப்பேரவை உறுப்பினராக நீண்ட அனுபவம் கொண்ட பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டிக்கும் வாழ்த்துகள்.

ஜி.கே.மணி (பாமக): ஆசிரிய ராக வாழ்வைத் தொடங்கி கடின உழைப்பால் பேரவைத் தலைவராகி யுள்ள மு.அப்பாவுக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவை விவாதங்களை நடுநிலையோடு வழிநடத்தும் வல் லமை அவருக்கு உண்டு. நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கு.பிச்சாண்டி, பேரவை துணைத் தலைவராகியுள்ளார். இருவருக்கும் வாழ்த்துகள்.

நயினார் நாகேந்திரன் (பாஜக): பேரவைத் தலைவராகியுள்ள மு.அப் பாவு எனது குடும்ப நண்பர் என்ப தால் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். கொள்கை மாறுபாடுகள் இருந்தா லும் நெருங்கிய நண்பர். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்காமல் எங்களுக்கு அவர் அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

சிந்தனைச் செல்வன் (விசிக): பேரவைத் தலைவர் அப்பாவு வெற்றி, தோல்விகளை மாறிமாறி சந்தித்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பை அவர் ஏற்றிருக்கிறார். அவருக்கும் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டிக்கும் வாழ்த்துகள்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட்): அரசியல் வாழ்விலும், சட்டப்பேரவை யிலும் நீண்ட அனுபவம் கொண்ட பேரவைத் தலைவரும், துணைத் தலைவரும் அவையை திறம்பட வழிநடத்துவீர்கள் என்று நம்பு கிறேன். எங்களைப் போன்ற சிறிய கட்சிகளுக்கு பேச அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும்.

டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்ட பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இருவரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நடுநிலையோடு பேர வையை நடத்துவார்கள் என்று நம்பு கிறேன். இருவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

சதன் திருமலைக்குமார் (மதிமுக), மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் புதிய பேரவைத் தலைவர், துணைத் தலைவரை வாழ்த்திப் பேசினர்.

நிறைவாக வாழ்த்து தெரிவித்தவர் களுக்கு நன்றி தெரிவித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் பேசினர்.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரி வித்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘சட்டப்பேரவைத் தலை வரான எனக்கு வானளாவிய அதிகாரம் எதுவும் இல்லை. அதி காரம் சட்டப்பேரவைக்குதான். பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்வேன். பேரவை சிறப்பாக நடக்க அனை வரது ஒத்துழைப்பும் தேவை. சட்டத்தை மதித்து அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் செயல்படுவேன்’’ என்றார்.

அதன்பிறகு பேரவை மீண்டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x