Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை - கரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும் கரோனா 2-ம் அலை பாதிப்புக்கு எதிராக பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஊக்கத் தொகையும் வழங் கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா வைரஸ் தாக்கம் உள் ளது. கரோனா தாக்கத்தில் இருந்து மக் களை பாதுகாக்கும் பணியில் மருத்துவர் கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி யாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற் றும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், அந்த தொகை வழங்கப் படவில்லை என பலரும் தெரிவித்து வந்தனர்.

கணக்கெடுக்க உத்தரவு

இந்நிலையில், தமிழகத்தின் முதல்வ ராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கரோனாவால் இறந்த மருத்துவர்கள் குறித்து கணக்கெடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தற்போது மருத் துவர்கள் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றும் அரும் பணியில் கடந்த ஓராண்டாக மருத்துவர்களும் செவிலியர்களும் இதர பணியாளர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் தமது உயிரைத் துச்சமென மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள், தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர். இது ஈடுசெய்ய முடியாத பெரும் தியாகம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனா சிகிச்சைப் பணியில் இருந்தபோது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், அல்லும் பகலும் அரசு மருத் துவமனைகளில் பணியாற்றி வரும் மருத் துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணி யாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சிடி ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத் துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் கரோனா தொற்றுக் கான சிகிச்சை மற்றும் அதுசார்ந்த பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, கரோனா தொற்றின் 2-ம் அலை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கும் சேர்த்து மருத் துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று அனைத்து கட்சி கூட்டம்

இதனிடையே, கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம், தலைமைச் செலகத்தில் இன்று மாலை நடக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மே 13-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் கரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கு மாறு சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் இரண்டு பிரதிநிதிகள் பங் கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப் படுத்த இரு வார முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. எனினும், அடுத்த சில தினங்கள் தொற்று பரவல் மேலும் அதி கரிக்கும் என்றே மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதை முன்னிட்டே தற்போது தடுப்பூசியை உல களாவிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசே கொள் முதல் செய்ய முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில்தான் கரோனா பரவலை கட்டுப்படுத்த, சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x