Published : 13 May 2021 03:12 am

Updated : 13 May 2021 03:12 am

 

Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

ராஜபாளையத்தில் தடுப்பூசி செலுத்த - சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள் :

ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் அரசு மகப் பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் கூட்டம் நேற்று அதிகமாகக் காணப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி போடுவோர் காலை முதல் காத்திருந்து ஊசி போட்டுக் கொண்டனர்.


2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக 150-க்கும் மேற்பட்டோர் நீண்டநேரம் காத்திருந்தனர். இவர்களுக்கு டோக்கன் வழங்கி சமூக இடை வெளியை பின்பற்றாமலும், அமர வைக்காமலும் மொத்தமாக நிற்க வைத்திருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக செவிலி யர்கள் இருவர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள், பலமுறை எச்சரித்தபோதும் வரிசையில் நின்றவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தனர்.

நேற்று காலையில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதற்காக குவிந்தனர். ஆனால் 80 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. மீத முள்ளவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x