Published : 12 May 2021 03:14 am

Updated : 12 May 2021 03:14 am

 

Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளுக்காக - முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் : பொதுமக்கள், சமுதாய அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமுதாய அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:


கரோனா தொற்றின் 2-வது அலையால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தற்போது நமது மாநிலத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 389 பேர்தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 31 ஆயிரத்து 410 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தஅலை, நம் மாநிலத்தின் மருத்துவக்கட்டமைப்பின் மீதும், மக்கள் மீதும்கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இச்சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த நன்கொடை அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி, சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள், செறிவூட்டும் இயந்திரங்கள், ஆடிபிசிஆர் கிட்கள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகள் வாங்குதல் போன்றகரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதிஅளிக்கிறேன்.

நன்கொடை விவரங்கள் மற்றும்இந்த நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்தவிவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொது வெளியில் வெளியிடப்படும். நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டத்தின் கீழ் 100சதவீதம் வரிவிலக்கு உண்டு. வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டுமக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்துக்கு அயல்நாட்டு பங்களிப்பு சட்டப்படி விலக்களிக்கப்படும்.

நன்கொடைகளை மின்னணு முறை மூலம், வங்கி இணைய சேவை அல்லது கடன், பற்று அட்டைமூலம், ‘https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html’ என்ற இணையதளம் வழியே அனுப்பலாம். இசிஎஸ், ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டிமூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

குறிப்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளையில், 117201000000070 என்ற சேமிப்பு கணக்கு எண்ணுக்கு அனுப்பலாம். அதற்கான ஐஎஃப்எஸ்சி குறியீடு IOBA0001172, எம்ஐசிஆர் குறியீடு 600020061 மற்றும் சிஎம்பிஆர்எஃப் நிரந்தர கணக்கு எண் AAAGC0038F ஆகும்.

இதுதவிர யுபிஐ-விபிஏ வாயிலாக tncmprf@iob என்ற நுழைவு வாயிலாகவும், போன்பே, கூகுள் பே, பேடிஎம், அமேசான் பே, மொபிக்விக் போன்ற செயலிகள் வாயிலாகவும் நன்கொடை அனுப்பலாம். இசிஎஸ் மூலம் நிதி அனுப்புவோர் உரிய அலுவலக பற்றுச்சீட்டை பெறஏதுவாக, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்கள் முழுமையான முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி அல்லது கைபேசி எண் ஆகிய தகவல்களை குறிப்பிட வேண்டும்.

நிவாரண நிதி வழங்கும் வெளிநாட்டவர் ‘IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai’ என்ற ஷிப்ட் குறியீடைப் பின்பற்ற வேண்டும்.

மின்னணு மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் கோடிட்ட காசோலை அல்லது வங்கிவரைவோலை மூலம் ‘அரசு இணைசெயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித் துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, நேரடியாக முதல்வர், அரசு அலுவலர்களிடம் நன்கொடை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதியுதவி செய்பவர்கள் பெயர் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

சமூக பொறுப்பு நிதியில் இருந்துநிதி வழங்கும் நிறுவனங்கள், மாநிலபேரிடர் மேலாண்மை அமைப்பின்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலகம் கிளையில் 1172010000017908 என்ற கணக்கு எண்ணுக்கு IOBA0001172 என்ற ஐஎஃப்எஸ்சி குறியீட்டைப் பயன்படுத்தி அனுப்பலாம். இவ்வாறுமுதல்வர் தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x