Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம் :

திராவிடக் கட்சிகளின் ஆளுமை மிக்க தலைவர்களான ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் மறைந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சிகள் தங்களின் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பதிவான வாக்குகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் 67.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அமமுக, மதிமுக ஆகிய சிறிய திராவிடக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்தம் 70.4% வாக்குகள். இதுதான் திராவிடக் கட்சிகள் இதுவரை பெற்றிருக்கும் இரண்டாவது அதிகபட்ச வாக்குவீதம்; திராவிடக் கட்சிகள் 2016-ல் பெற்ற இதுவரையிலான அதிகபட்ச வாக்குவீதமான 73.9%-ஐவிட இது 3.5% மட்டுமே குறைவாகும். திமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட திராவிடக் கட்சிகள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பது நம் கவனத்தை அதிகமாகக் கவர்கிறது.

எதிர்பார்ப்புகள், விளைவுகள்

அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிடக் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில், அந்தக் கட்சி தொடர்ந்து வந்த இரண்டு தலைவர்களின் (எம்ஜிஆர், ஜெயலலிதா) ஆளுமைக் கவர்ச்சியையே சார்ந்திருந்தது, கருணாநிதி தனக்குப் பிறகு ஒரு தொடர்ச்சியை விட்டுச்சென்றதுபோல் ஜெயலலிதா தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கவில்லை. மேலும், கட்சியின் கட்டமைப்பும் பலவீனமாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைவர்கள் பெரிதும் ஒன்றிய அரசையே சார்ந்திருந்தார்கள். மாநிலத்தின் மிதமான மக்கள்நல பாணியை அவர்களால் போதிய அளவுக்குத் தக்கவைக்க முடியவில்லை. ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தனத்தை, இந்துப் பெரும்பான்மைவாதத்தை, முழுமையான நவதாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தார்கள் அல்லது கிட்டத்தட்ட எதிர்க்கவே இல்லை. குடியுரிமை (திருத்தச்) சட்டம், ஜம்மு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x