Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

வன்முறை நடந்த பகுதிகளை விரைவில் பார்வையிடுவேன்: மேற்கு வங்க ஆளுநர் தன்கர் தகவல்

தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் சம்பவ இடத்தை விரைவில் பார்வையிட உள்ளதாகவும் மேற்கு வங்க ஆளுநர் தன்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது ஆளும் கட்சியினர் நடத்திய தாக்குதலே வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஜெக்தீப் தன்கர் நேற்றுபதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. வன்முறை நடந்த பகுதிகளை விரைவில் பார்வையிட உள்ளேன். அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். பதிலுக்காக காத்திருக்கிறேன்.

ஜனநாயகக் கடமையை ஆற்றியதற்காக சிலர் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள். நீங்கள் அளித்த வாக்கு உங்களுடைய மரணத்துக்கோ அல்லது சொத்துகள் சேதமாவதற்கோ காரணமாக அமைந்தால், அதுஜனநாயகம் முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞையாக அமைந்துவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x