Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி தேர்வு :

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக 66 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க் கட்சியாக ஆகி உள்ளது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட் டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்) யார் என்பது குறித்து ஆலோசிக் கப்பட்டது. அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தால், எவ்வித முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 10-ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி அளித்த நிலையில், நேற்று காலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் பழனிசாமி தலை மையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மீண்டும் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோர் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது அவர்களின் ஆதர வாளர்கள் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிரடிப்படை காவல் துறையினர் அங்கு குவிக்கப் பட்டனர்.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கரோனா பாதிப்பு காரணமாக ஆர்.வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப் பையா ஆகியோர் கூட்டத்தில் பங் கேற்கவில்லை. கூட்டம் தொடங் கியதும் இரு தரப்பு நிர்வாகிகளும் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். துணை ஒருங் கிணைப்பாளர் ஆர்.வைத்தி லிங்கம், தொலைபேசியில் தொடர்புகொண்டு ஓபிஎஸ், பழனி சாமி ஆகியோருடன் பேசினார். அப்போது அவர், கட்சியின் எதிர்காலம் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

3 மணி நேரம் கூட்டம்

தொடர்ந்து 3 மணி நேரம் கூட்டம் நீடித்தது. ஆளும் திமுகவில் எம்எல்ஏக்கள் அதிகமாக இருப்ப தால் அவர்களுக்கு எதிராக பல மாகவும், திறம்படப் பேசும் நப ரையே எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். முதல் வராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால், அதிகாரி களும் உறுதுணையாக இருப் பார்கள் என்று எம்எல்ஏக்கள் சிலர் கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில எம்எல்ஏக்கள், ஜெயலலிதா இருக்கும்போது அதிமுக எதிர்க் கட்சியாக இருந்த நிலையில், பன்னீர்செல்வம்தான் சட்டப்பேர வையில் எதிர்க்கட்சி துணைத் தலை வராக பணியாற்றினார். எனவே, அவருக்குதான் பதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், ‘‘வேண்டுமென்றால் முன்னாள் பேரவைத் சபாநாயகர் தனபா லுக்கு பதவி வழங்கலாம்’’ என்று கூறினார். இதற்கு யாருமே ஆதரவு அளிக்கவில்லை. இறுதியாக பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘பதவியை விட்டுக் கொடுக்கிறேன், ஆனால், கட்சித் தலைமையை ஏற்க நல்ல முடிவு எடுங்கள்’’ என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து முதல் நபராக கிளம்பிச் சென்றார்.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை உறுப் பினர்களால் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளனர்.

அதன்பின், முன்னாள் அமைச் சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் சென்று, எதிர்க்கட்சித் தலைவராக பழனி சாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை, பேரவைச் செயலர் கே.சீனிவாசனிடம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x