Published : 10 May 2021 06:24 am

Updated : 10 May 2021 06:24 am

 

Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

ஊரடங்கால் வாழை இலை விற்பனை சரிவு :

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தினமும் உணவகங்களுக்கு மட்டுமின்றி, திருமணம், காதணி விழா, கோயில் விழாக்கள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளின்போது வாழை இலைக்கு தனிஇடம் எப்போதுமே உண்டு.

கரோனா இரண்டாம் அலை காரணமாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்வுகளில் குறிப்பிட்டநபர்கள் தான் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வாழை இலை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் 500 வாழை இலைகள் பயன்படுத்தப்பட்ட திருமண விழாக்களில் தற்போது 50 மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்சலுக்கும் பாலித்தீன் கவர்களை பயன்படுத்தி வருவதால், வாழை இலை வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாழைஇலை வியாபாரிகள் கூறும்போது, ‘‘விழாக் காலங்களில் நூறு இலை கொண்ட வாழை இலை கட்டு 1,000 ரூபாய்க்கு வாங்கிச்சென்ற நிலைமாறி தற்போது 200 ரூபாய்க்கும் கீழேதான் வாங்கிச் செல்கின்றனர். வாழை இலை விரைவில் பழுத்து காய்ந்து விடும் என்பதால், தேக்கி வைத்து விற்பனை செய்யவும் முடியாது’’ என்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x