Last Updated : 10 May, 2021 06:24 AM

 

Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

முதல்வர் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணம் - ரூ.1,000 வழங்கிய சிறுவனுக்கு ஸ்டாலின் சைக்கிள் பரிசு :

தான் சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையைச் சேர்ந்த சிறுவன் அனுப்பி வைத்தார்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமரேஸ் இளங் கோவன். மாநகராட்சி ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஹரிஸ்வர்மன்(7). புனித பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இச்சிறுவனுக்கு 3 ஆண்டு களுக்கு முன்பு அவனது பிறந்த நாளையொட்டி உண்டியல் ஒன்றை தந்தை பரிசாக வழங்கி உள்ளார். அந்த உண்டியலில் அவ்வப்போது தனக்கு அன்பளிப்பாகக் கிடைக்கும் பணத்தை ஹரிஸ்வர்மன் சேமித்து வந்துள்ளான்.

இந்நிலையில், தான் சேமித்த பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்க சிறுவன் விரும்பி னான். உண்டியல் பணத்தை எண்ணியபோது ஆயிரம் ரூபாய் இருந்தது. அப்பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்து, தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்துள்ளான்.

அதன்படி ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை மூலம் அமரேஸ் இளங் கோவன் அனுப்பி வைத்தார். அத்துடன் தமிழக முதல்வருக்கு ஹரிஸ்வர்மன் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளான்.

அதில், தான் சேமித்து வைத்த பணத்தை கரோனா நிவாரணப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளான்.

இந்நிலையில் மதுரை வடக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி ஹரிஸ்வர்மன் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று பாராட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார்.

பின்னர், அங்கிருந்து தளபதி மொபைல் போனில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு ஹரிஸ்வர்மனை பேச வைத்தார். மு.க.ஸ்டாலின் சிறுவனிடம், `நல்லாயிருக்கியா? உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்? அப்பா பெயர் என்ன? சைக்கிளை எடுத்துட்டு இப்போது வெளியே போகாத, கரோனா இருக்கு, கரோனா முடிந்ததும் ஓட்டு, நல்லா படி’ என்றார்.

அதற்கு, ‘ஹலோ தாத்தா, வாழ்த்துக்கள் தாத்தா, 2-ம் வகுப்பு படிக்கிறேன், சைக்கிள் வாங்கி கொடுத்ததுக்கு நன்றி’ என்றான் ஹரிஸ்வர்மன். வாழ்த்துக்கள் சொன்ன சிறுவனுக்கு மு.க.ஸ்டா லின் நன்றி தெரிவித்துக் கொண் டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x