Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

லாரஸ் விருதை வென்றார் நடால் : சிறந்த வீராங்கனை விருது நவோமி ஒசாகாவுக்கு வழங்கப்பட்டது

லாரஸ் விருதுடன் ரபேல் நடால்.

செவிலே

உலகின் சிறந்த வீரர் விருதை ஸ்பெயினின் ரபேல் நடாலும், சிறந்த வீராங்கனைக்கான விருதை ஜப்பானின் நவோமி ஒசாகவும் வென்றனர்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் லாரஸ் அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஸ்பெயினின் செவிலே நகரில் டிஜிட்டல் முறையில் நடைபெற்றது. இதில் ஆண்டின் சிறந்த வீரர் விருது பிரபல டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலுக்கு வழங்கப்பட்டது. லாரஸ் விருதை நடால் பெறுவது இது 4வது முறையாகும். சிறந்த வீராங்கனை விருதை ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா தட்டிச் சென்றார்.

சிறந்த உலக அணி விருது பேயர்ன் முனிச் கால்பந்து அணிக்கும், உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் விருதை லீவர்புல் கால்பந்து அணியின் மொகமது சாலாவும், வாழ்நாள் சாதனையாளர் விருது பில்லி ஜீன் கிங்கிற்கும் வழங்கப்பட்டது. சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஃபார்முலா ஒன் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டனுக்கு இந்த ஆண்டின் தடகள வழக்கறிஞர் விருதை வென்றார்.

படவிளக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x