Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM

முதல்வரின் தனிச் செயலர்களாக - 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலர்களாக உதயசந்திரன் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். தொடர்ந்து, தலைமைச் செயலகம்வந்த அவர், முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், முதல்வரின் செயலர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

டி.உதயசந்திரன்

தமிழக தொல்லியல் துறைஆணையராக உள்ள டி.உதயசந்திரன், முதல்வரின் செயலர்-1ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் பி.உமாநாத் செயலர்-2 ஆகவும்,அருங்காட்சியகங்கள் ஆணையர்எம்.எஸ்.சண்முகம் செயலர்-3ஆகவும், தொழில் துறை ஆணையராக உள்ள அனுஜார்ஜ் செயலர்-4 ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், மக்களிடம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றுக் கொண்டார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதியும் அளித்திருந்தார்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’

இந்நிலையில், அதை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக புதிய துறை உருவாக்கப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று கையெழுத்திட்டார்.

இந்த புதிய துறைக்கு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x