Published : 07 May 2021 03:12 am

Updated : 07 May 2021 03:12 am

 

Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

கரோனா வைரஸ் தொற்றால் : ஆர்எல்டி தலைவர் அஜித் சிங் உயிரிழப்பு :

லக்னோ: முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகன் அஜித் சிங். இவர் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்தார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் 20-ம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் சிங், உத்தர பிரதேச மாநிலம் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.20 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

இத்தகவலை அஜித் சிங்கின் மகனும் ராஷ்டிரிய லோக் தள் துணைத் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி நேற்று அறிவித்தார்.


உ.பி.யின் பாக்பத் தொகுதி எம்.பி.யாக 7 முறை பதவி வகித்தவர் அஜித் சிங். அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘விவசாயிகளின் நலனுக்காக எப்போதும் பாடுபட்டவர் அஜித் சிங். கடந்த காலத்தில் மத்திய அரசில் அமைச்சராக இருந்து துடிப்புடன் செயல்பட்டவர். அவரது குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் ஆதித்யநாத் மற்றும் ராகுல், பிரியங்கா, அகிலேஷ், மாயாவதி உட்பட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x