Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

கரோனாவால் இறந்த ஊழியர் குடும்பத்துக்கு - முத்தூட் நிறுவனம்புதிய நலத்திட்டம் அறிமுகம் :

தங்க நகைக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட், கரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் புதிய நலத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆபத்தான பெருந்தொற்றில் இருந்து தமது ஊழியர்களைப் பாதுகாக்க முத்தூட் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனிநபர் இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம்செய்வதன் முக்கியத்துவம் குறித்துஊழியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பணியாளர் நலத்திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முத்தூட்நிறுவன ஊழியர் கோவிட்-19 பாதித்து இறக்க நேரிட்டால், அவரது அடுத்த 24 மாத ஊதியத்தை அவரது மனைவி அல்லது தாய்க்கு நிறுவனம் வழங்கும்.

இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் கருணைத் தொகை உட்பட பணிநீக்கத்துக்கு முந்தைய காலத்தில் பணியாற்றியதற்கான சலுகைகள் ஆகியவையும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பணியாளரும், குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாகவும் நோய்த் தொற்றில்இருந்து தற்காத்துக் கொள்வதையும் நிறுவனம் உறுதி செய்யும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊழியர்கள், குடும்பத்தினர் ஊக்குவிக்கப்படுவர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் நகல் வழங்கினால் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x