Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

மேஷம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும்

மேஷம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள்.ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.மிதுனம்: கடந்தகால சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.கடகம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.சிம்மம்: கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.கன்னி: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.துலாம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பால்ய நண்பர்களால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.விருச்சிகம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.தனுசு: மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.கும்பம்: முன்கோபத்தை குறையுங்கள். எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள்கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் காட்டாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x