Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

விஐடி பல்கலைக்கழக நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு :

வேலூர்: விஐடி பல்கலைக்கழக ஆன்லைன் நுழைவுத் தேர்வு வரும் மே 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ‘விஐடி-2021’ கரோனா தாக்கத்தால் ஆன்லைன் வழியாக நடத்தப்படவுள்ளது. அதன்படி, இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி வரும் 31-ம் தேதி வரை ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் இம்மாதம் 20-ம் தேதியுடன் முடிகிறது. எனவே, மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை விரைவாகவும், கவனமாகவும் பூர்த்தி செய்யவும். மேலும், விவரங்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x