விருதுநகரில் : மருத்துவர், செவிலியர் பணி :

விருதுநகரில்  : மருத்துவர், செவிலியர் பணி :
Updated on
1 min read

விருதுநகர் ஆட்சியர் இரா.கண் ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கரோ னாவைத் தடுக்கும் பொருட்டு, சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் மருத்துவர்கள், செவி லியர்கள், ஆய்வக நுட்புநர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணி நிலைகளில் தற்காலிகமாகப் பணிபுரிய தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிகள் தற்காலிகமானது. இதில், பணியாற்ற விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய தகுதிச்சான்று நகல்களுடன் இம்மாதம் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in