Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

வீரர்கள் அடுத்தடுத்து கரோனாவால் பாதிப்பு - ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை

அடுத்தடுத்து வீரர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டதை தொடர்ந்து ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொட ரில் பங்கேற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இரு வருக்கும் கரோனா தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டதை யடுத்து, நேற்றுமுன்தினம் நடை பெற இருந்த கொல்கத்தா, பெங் களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணியுடன் மும்பை அணி மோதி யது. இந்த ஆட்டத்தின் இடையே பாலாஜியுடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பலரும் சந்தித்துப் பேசினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியினர் மத்தியிலும் கலக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா, சென்னை அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ரித்திமான் சாஹா, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. 4 அணி களைச் சேர்ந்த வீரர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளானதால் போட்டி களை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகியவை இணைந்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் ஐபிஎல் 2021 சீசனை உடனடியாக தள்ளிவைப்பது என்றும் இதை உடனடி யாக அமல்படுத்துவது என்றும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஐபிஎல் நிர் வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஐபிஎல் ஏற்பாட்டில் ஈடு பட்டுள்ள மற்ற பங்கேற்பாளர்களின் உடல் நலன் பாதுகாப்பில் பிசிசிஐ சமரசம் செய்துகொள்ள விரும்ப வில்லை. அனைத்து பங்குதாரர் களின் பாதுகாப்பு, உடல் நலம் மற் றும் நல்வாழ்வை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். தற்போது கடினமான காலக்கட்டம், குறிப்பாக இந்தியாவில் நாங்கள் சில நேர்மறையான விஷயங்கள் மற்றும் உற்சாகத்தை கொண்டு முயற்சித்திருக்கிறோம். இருப் பினும் தற்போது ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்துவது கட்டாயமாகும்.

இந்த கடினமான காலக்கட்டத்தில் எல்லோரும் தங்கள் குடும்பத் தினருடனும், அன்புக்குரியவர் களிடமும் திரும்பி செல்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாக திரும் பிச் செல்ல பிசிசிஐ தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யும். சுகாதார பணியாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி யின் உரிமையாளர்கள், பங்குதாரர் கள் மற்றும் மிகவும் கடினமான காலங்களில் கூட ஐபிஎல் தொடரை ஒழுங்கமைக்க முயற்சித்த அனைத்து சேவை வழங்குநர் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறப் பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வீரர்கள், நியூஸிலாந்தைச் சேர்ந்த 10 வீரர்கள், இங்கி லாந்தை சேர்ந்த 11 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 11 வீரர்கள், மேற்கிந்தியத் தீவு களைச் சேர்ந்த 9 வீரர்கள், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த தலா 3 வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக இந்தியாவில் தங்கியுள்ளனர்.

ஏற்கெனவே இந்தியா வில் ஐபிஎல் தொடரில் பங்கேற் றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், வர்ணணையாளர்களை நாட்டுக் குள் அனுமதிக்க மாட் டோம், அவர்களுக்கென சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது என அந்நாட்டு பிரதமர் அறிவித் திருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது. இதனால் வெளிநாட்டு வீரர் களை எப்படி அனுப்பி வைப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் கூறும்போது, “நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், அதற்கான வழியைக் கண்டுபிடிப்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x