Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

அமைதி காக்க மம்தா வேண்டுகோள் - மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில் 12 பேர் உயிரிழப்பு : ஆளுநரிடம் கவலை தெரிவி்த்தார் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளில் 12 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கருடன் தொலைபேசியில் பேசி தனது கவலையை தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை யிலான திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர் தலின்போது திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. தேர்தலுக்குப் பிறகும் வன்முறை நீடிக்கிறது. தொடர்ந்து பல இடங்களில் வன்முறைகள் நடந்து வருகின்றன.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக் கப்பட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது. வன்முறைகளில் இது வரை 12 பேர் உயிரிழந் துள்ளனர். வன்முறையைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று நாடு முழு வதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைகள் தொடர்பாக மாநில அரசின் தலைமைச் செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. வன் முறையால் மேற்கு வங்கம் முழுவதும் பதற் றம் நிலவுகிறது.

இந்நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநிலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் பற்றியும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். வன்முறைகள் குறித்து ஆளுநரிடம் பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் ஜக்தீப் தங்கர் தனது ட்விட்டர் பதிவில் “பிரதமர் தனது கடுமையான வேத னையையும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழ்நிலை குறித்து கவலையையும் வெளிப்படுத்தினார். வன்முறை, தீ வைத்து எரிப்பது, கொள்ளை மற்றும் கொலைகள் தடை யின்றி தொடர்கின்றன என் பதால், கடுமையான கவலை களை நான் பகிர்ந்து கொண் டேன். மாநிலத்தில் வன்முறைகள் கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மம்தா வேண்டுகோள்

இதனிடையே, வன்முறை யில் ஈடுபடாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள் ளார். இதுகுறித்து மம்தா கூறுகையில், ‘‘வன்முறை களுக்கு பாஜகதான் காரணம். தேர்தல் நேரத்தில் பாஜகவும் மத்திய ஆயுதப் படைகளும் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறேன். வன்முறை யில் ஈடுபடக் கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸிடம் தெரிவியுங்கள். சட்டம் ஒழுங்கு நிலைமையை போலீஸார் பார்த்துக் கொள்வார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x