Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கேரளத்தின் கதைப்பாட்டி :

சுமங்களா என்கிற புனைப்பெயர் கொண்ட லீலா நம்பூதிரிபாடு ‘கேரளத்தின் கதைப்பாட்டி’ என்று அறியப்படுபவர். குழந்தைகளுக்காகப்பல நூறு கதைகளையும் 70-க்கும்மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியவர். திருச்சூர் மாவட்டம் வடக்கன்சேரியில் வாழ்ந்துவந்த அவர், 87 வயதில் கடந்த வாரம் காலமானார்.

குழந்தைகளுக்காகச் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களை அவர் படைத்திருக்கிறார். ‘நெய்ப் பாயசம்’, ‘தங்கக் கிங்கிணி’, ‘குன்றிமணி’, ‘மிட்டாய்ப்பெட்டி’ உள்ளிட்ட அவருடைய பல நூல்கள் புகழ்பெற்றவை. ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் எனும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு மலையாளக் குழந்தைகளுக்குச் சுவாரசியமான பலகதைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். அவருடைய கதைகளில் வெளிப் படும் கேரளப் பண்பாட்டு அம்சங்கள், குழந்தைகளுக்குத் தங்கள் வேர்களின் மீதான பிடிப்பை அதிகப்படுத்தின. மலையாளத்தின் ‘எனிட் பிளைடன்’ என்று புகழப்படுபவர் சுமங்களா.

குழந்தைகளுக்கு எழுதியது மட்டு மல்லாமல், மலையாளப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் இருக் கிறார். ‘பச்ச மலையாளம்’ என்கிற பெயரில் மலையாளப் பேச்சு வழக்குச் சொற்கள் அடங்கிய இரண்டு தொகுதி அகராதியைத் தொகுத்திருக்கிறார். கேரளக் கலா மண்டலத்தின் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றியவர்.

2013-ல் வாழ்நாள் பங்களிப்புக்காக ‘பால சாகித்ய விருது’ பெற்றார். அவருடைய ‘மிட்டாய்ப்பெட்டி’ நூல் 1979-ல்கேரள அரசின் விருது பெற்றது. இந்த நூல் ‘பேரன்பின் பூக்கள்’ என்கிற பெயரில் யூமா வாசுகியால் தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(புக்ஸ் ஃபார் சில்ரன்-சித்திரச் செவ்வானம் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924).- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x