Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 72 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு :

தஞ்சாவூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிட்ட 72 வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் பெற்றதால், தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் திமுக, பாஜக, அமமுக வேட்பாளர்களைத் தவிர 9 பேரும், திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்ட 14 பேரில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர 12 பேரும், கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட 10 பேரில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர 8 பேரும், பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட 13 பேரில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர 11 பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர 10 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர 10 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட 8 பேரில் திமுக, தமாகாவை தவிர 6 பேரும், பேராவூரணி தொகுதியில் போட்டியிட்ட 8 பேரில் திமுக, அதிமுகவை தவிர 6 பேரும் குறைந்த வாக்குகளைப் பெற்று தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் போட்டியிட்ட 89 வேட்பாளர்களில் 72 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x