Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

சேலத்தில் மாம்பழ வரத்து குறைவால் விலை 60 சதவீதம் உயர்வு :

சேலம்: சேலம் மாவட்டத்தில் மாம்பழ வரத்து சரிவால் விலை உயர்ந்துள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாம்பழம் விளைச்சலில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டுள்ளனர். மல்கோவா, இமாம்பசந்த், குதாதத், சேலம் பெங்களூரா, நடுசாலை உள்ளிட்ட ரக மாம்பழங்கள் விளைகின்றது.

சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலை புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் மாமரங்கள் அதிகளவு உள்ளன.

ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் என்பதால், விற்பனைக்கு அதிகளவு மாம்பழங்கள் மார்க்கெட்டுக்கு வரும்.

நடப்பாண்டு, நவம்பர், டிசம்பரில் மா பூ பூத்து குலுங்கியது. இதனால், மாம்பழம் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால், ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழையால், மாமரங்களில் பூத்த பூக்கள் உதிர்ந்து, காய் பிடிப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தியது.

தற்போது, மாம்பழம் சீஸன் தொடங்கியுள்ள நிலையில் சந்தைக்கு மாம்பழங்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வரத்து குறைந்த நிலையில், விலை கடந்த ஆண்டை விட 40 முதல் 60 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

மார்க்கெட்டில் மல்கோவா, இமாம்பசந்த் கிலோ ரூ.180-க்கும், நடுசாலை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x