Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கடலூர் மாவட்டத்தில் 7 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது :

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் கடலூர்,சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதன்கூட்டணிக்கட்சியான பாமக நெய்வேலி, விருத்தாசலத்திலும், பாஜக திட்டக்குடி தொகுதியிலும் போட்டியிட்டன. இதே போல் திமுக கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி, புவனகிரி ஆகிய 5 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ் விருத்தாசலத்திலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோவிலிலும், பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியும், சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிட்டன.

சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. மற்ற 7 தொகுதிகளில் கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, நெய்வேலியில் திமுகவும், காட்டுமன்னார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியும், பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியும் என கடலூர் மாவட்டத்தில் 7 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x