Published : 04 May 2021 03:13 am

Updated : 04 May 2021 03:13 am

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

மானாமதுரை தொகுதியை கைப்பற்றிய திமுக :

மானாமதுரை

தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்ற அதிமுகவிடமிருந்து மானாமதுரை தொகுதியை திமுக கைப்பற்றியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தமிழரசி, அதிமுக வேட்பாளர் நாகராஜன், அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகபிரியா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசங்கரி ஆகியோர் போட்டியிட்டனர்.


இதில், திமுக வேட்பாளர் தமிழரசி 89,364 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் நாகராஜன் 75,273 வாக்குகள் பெற்றார். இதில் அதிமுக வேட்பாளரை விட 14,091 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சண்முகபிரியா 23,228 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென் னடி 10,321 வாக்குகள் பெற்று நான்காமிடம் பிடித்தார். தொடர்ந்து 4 முறை அதிமுகவிடமிருந்த மானாமதுரை தொகுதியை திமுக கைப்பற்றிஉள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x