Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

நாமக்கல்லில் 6 தொகுதியில் 4-ல் திமுக வெற்றி: அதிமுகவுக்கு 2 இடம் :

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் என 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திருச்செங்கோடு நீங்கலாக மற்ற 5 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிட்டன. திருச்செங்கோடு தொகுதி திமுக கூட்டணியான கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இதில், நேற்று முன்தினம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாமக்கல், சேந்தமங்கலம் (ப/கு), ராசிபுரம் (தனி), திருச்செங்கோடு ஆகிய 4 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், குமாரபாளையம், பரமத்திவேலூரில் அதிமுகவும் வெற்றி பெற்றன.

இதில், குமாரபாளையம் தொகுதியை கைப்பற்றிய அமைச்சர் பி.தங்கமணி தொடர்ந்து 3-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுபோல், நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிட்டார். எனினும், திமுக வேட்பாளர் ராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினார். ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் வி.சரோஜாவும், திருச்செங்கோடு தொகுதியில் பொன்.சரஸ்வதியும் 2-வது முறைாக போட்டியிட்டு தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி, ராசிபுரத்தில் திமுக வேட்பாளர் மதிவேந்தன், திருச்செங்கோட்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக ஈஸ்வரன், பரமத்திவேலூரில் அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x