Published : 04 May 2021 03:14 am

Updated : 04 May 2021 03:14 am

 

Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

சுயேச்சையாக களமிறங்கிய எம்எல்ஏ-வால் சேந்தமங்கலம் தொகுதியை இழந்த அதிமுக :

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிட சீட் வழங்காத அதிருப்தியில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர் 11,371 வாக்குகள் பெற்ற நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த சி.சந்திரசேகரன் இருந்தார். இரண்டாவது முறையாக போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் அதிருப்தியடைந்த சந்திசேகரன் சுயேச்சையாக களம் இறங்கினார்.


இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், சுயேச்சையாக களம் இறங்கிய சந்திரசேகரன் ஆட்டோ ரிக் ஷா சின்னத்தில் போட்டியிட்டு 11,371 வாக்குகள் பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். சந்திரன் 80,188 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி 90,681 வாக்குகள் பெற்று 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x