Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

சொன்னதை செய்து காட்டிய கே.என்.நேருவுக்கு குவியும் பாராட்டு : ‘எல்லாப் புகழும் மு.க.ஸ்டாலினுக்கே' என பெருமிதம்

திருச்சி

திருச்சி மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு பாராட்டு குவிகிறது.

திருச்சி சிறுகனூரில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் விடியலுக்கான முழக் கம் என்ற பெயரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். இந்த பொதுக்கூட்டத்துக்கு பிறகு திமுகவினர் மத்தியில் புதிய எழுச்சியும், உத்வேகமும் ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சி அமைப்பதற்கு உதவும் வகையில் மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் குறைந்தபட்சம் 35 தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உறுதியளித்தார். அதுபோலவே தனது தொகுதி மட்டுமின்றி மத்திய மண்டலம் முழுவதும் பம்பரம்போல சுழன்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார்.

இந்த சூழலில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கே.என்.நேரு 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். மாநில அளவில் ஒப்பிடுகையில் இது, 5-வது அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். இதுமட்டுமின்றி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 41 தொகுதிகளில் விராலிமலை, ஒரத்தநாடு, நன்னிலம், வேதாரண்யம் ஆகிய 4 தொகுதிகளைத் தவிர மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. எனவே சொன்னதைச் செய்து காட்டிய கே.என்.நேருவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கே.என்.நேருவிடம் கேட்டபோது, ‘‘உள்ளாட் சித் தேர்தலில் திருச்சி மாவட் டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது போலவே, சட்டப்பேரவைத் தேர்தலிலும் இங்குள்ள அனைத்து தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மத்திய மண்டலத்திலும் மக்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

இதற்கான எல்லா புகழும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கே சேரும். திருச்சியில் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம், உய்யகொண்டான் ஆறு சீரமைப்பு, குடிநீர், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். ஏரி, குளங்களை தூர் வாருவோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாக இருப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x