Last Updated : 04 May, 2021 03:14 AM

 

Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

அரியலூர், பெரம்பலூருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? : எதிர்பார்ப்பில் 2 மாவட்டங்களின் மக்கள்

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ள அரிய லூர், பெரம்பலூரைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர வையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரு மாவட்ட மக்களும் உள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்துவந்த நிலையில், கடந்த 2016-ல் அரியலூர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு, அரசு தலைமைக் கொறடா பதவியை அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், பழனிசாமி தலைமையிலான ஆட்சியிலும், ராஜேந்திரனிடம் கொறடா பதவி இருந்ததால், அரியலூருக்கு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்ட சில வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களுக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், குன்னம் ஆகிய 4 தொகுதிகளையும் அதிமுக வசமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது. இதில், அரியலூரில் மதிமுக சார்பில் கு.சின்னப்பா வெற்றி பெற்றாலும், அவரும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். இந்த 4 தொகுதி களும் உள்ள 2 மாவட்டங்களும் மிகவும் பின்தங்கிய மாவட்டங் களாக உள்ளன.

பெரம்பலூரில் முன்பு எம்எல்ஏ வாக இருந்த ஆ.ராசா, அமைச் சராக பதவியேற்ற பிறகுதான், இளைஞர்களுக்கு வேலை, கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர், அரியலூரில் பொறி யியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு திட்டங் கள் கொண்டுவரப்பட்டு, பெரம்ப லூர் மற்றும் அரியலூர் மாவட்டங் கள் ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்தன.

ஆ.ராசா நீலகிரி தொகுதிக்குச் சென்ற பிறகு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெரிய அளவில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அமைச்சர்கள் உள்ள மாவட் டங்களே வளர்ச்சி அடைகிறது என எதிர்பார்க்கப்படுவதால், தற்போது ஆளுங்கட்சியாக பொறுப்பேற்க உள்ள திமுகவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், இவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என இம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குறிப்பாக, வெவ்வேறு தொகுதிகளில் 4 முறை எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றுள்ள குன்னம் தொகுதி எம்எல்ஏவான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குன்னம் தொகுதி பெரம்பலூர், அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களின் ஒருங்கி ணைந்த தொகுதியாக உள்ள தால், இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக் கும் தொழிற்சாலைகள், மாணவர் களுக்கு கூடுதல் கல்வி நிலையங் களைக் கொண்டுவர வாய்ப்பாக அமையும் என கருதுகின்றனர்.

மேலும், அரியலூரில் நடை பெற்று வரும் மருத்துவக் கல்லூரியின் பணிகளை விரைந்து முடித்து, போதிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப் பெறுவது, சிமென்ட் தொழிற்சாலைகளால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க சிமென்ட் ஆலைகளின் வாகனங்கள் செல்ல தனிச் சாலைகள் அமைப்பது என பல்வேறு வசதிகளும் அரியலூர் மாவட்டத்தில் அமைச்சர் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x