Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

அரியலூரில் தலைவர்களின் சிலைகளுக்கு கு.சின்னப்பா மாலை அணிவிப்பு :

அரியலூர்: அரியலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரனை விட 3,234 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியார், காமராஜர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கும், மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கும் கு.சின்னப்பா மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார்.

அப்போது, மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ பாளை அமரமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சேகர், விசிக தொகுதி செயலாளர் மருதவாணன் உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x