Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக அபார வெற்றி :

காரைக்கால்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வசமிருந்த காரைக்கால் தெற்கு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கே.ஏ.யு.அசனா, திமுக சார்பில் அக்கட்சியின் காரைக்கால் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோர் போட்டியிட்டனர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில், இதே தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.யு.அசனாவிடம் வெறும் 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நாஜிம், இம்முறை 12,034 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுள், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆறுமுகம்(இந்திரா நகர்) 18,531 வாக்குகள் வித்தியாசத்திலும், கே.எஸ்.பி.ரமேஷ்(கதிர்காமம்) 12,246 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அதற்கடுத்த நிலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம் வெற்றி பெற்றுள்ளார். நாஜிம் பெற்ற மொத்த வாக்குகள் 17,401, அசனா பெற்ற மொத்த வாக்குகள் 5,367. ஒருமுறை நியமன சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினராகவும் நாஜிம் இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x