Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

பெரும்பாலான தொகுதிகளில் - திமுக, அதிமுகவுக்கு அடுத்து 3-ம் இடம் பிடித்தது நாம் தமிழர் :

தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையான தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது நாம் தமிழர் கட்சி.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய திராவிடக் கட்சிகளுடன் தேசிய, மாநில கட்சிகள் மட்டுமல்லாமல் புதிதாகத் தொடங்கப்படும் கட்சிகளும் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி இத்தேர்தலுடன் சேர்த்து மூன்று தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டுள்ளது. இத்தேர்தலில் 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தேசியத் தலைவராக பிரபாகரனையும், தமிழ்தேசியத்தையும் முன்னிறுத்தும் இக்கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தேர்தலில் சென்னைதிருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x