Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

உச்சத்தை நெருங்கும் 2-வது அலை - இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரேநாளில் 4 லட்சத்தை கடந்தது : 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம்

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 4 லட் சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 ஆயிரத் துக்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர்.

கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நடப்பாண்டு தொடக்கத் தில் கணிசமாக குறைந்திருந்த வைரஸ் தொற்று, கடந்த பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து வேகமெடுக்க தொடங் கியது. நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பெருந்தொற்றுக்கு ஆளாகி வந்த சூழ லில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு கடந்த 9 நாட்களாக தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் அதிகமாக பதிவானது.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் நாடு முழுவதும் நேற்று 4 லட்சத்து 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. இதனால் இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 32 லட் சத்து 68,710-ஆக உயர்ந்துள்ளது. சனிக் கிழமை காலை 9 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11,853 –ஆக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் நேற்று 870 பேரும் டெல்லியில் 375 பேரும் உத்தரபிரதேசத்தில் 332 பேரும் சத்தீஸ்கரில் 269 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட் டுள்ள புள்ளிவிவரத்தின்படி, மகாராஷ் டிராவில் நேற்று மிக அதிகபட்சமாக 62,929 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இதேபோல, உத்தரபிரதேசத்தில் 32,921 பேருக்கும் கேரளாவில் 37,199 பேருக்கும் கர்நாடகாவில் 48,296 பேருக்கும் டெல்லியில் 25,238 பேருக்கும் மேற்கு வங்கத்தில் 17,403 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, நேற்று முதல் பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட் டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. எனினும், சில மாநிலங்களில் போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவர் உட்பட 8 கரோனா நோயாளிகள் உயி ரிழந்தனர். டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் உயிரிழப்பு ஏற்படுவதில் இது 3-வது துயர நிகழ்வாகும். இதற்கு முன் கங்கா ராம் மருத்துவமனை உள் ளிட்ட 2 மருத்துவமனைகளில் ஆக் சிஜன் பற்றாக்குறையால் 50-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x