Published : 02 May 2021 03:14 am

Updated : 02 May 2021 03:14 am

 

Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வாக்கு எண்ணிக்கை பணிக்காக பரிசோதனை : 169 பேருக்கு தொற்று உறுதி

கோவை

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபட கரோனா பரி சோதனை செய்துகொண்ட 4,368 பேரில் 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக் கான வாக்கு எண்ணும் மையம், தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட் டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அனைவருக்கும் சட்டப் பேரவை தொகுதி வாரியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அரசு ஊழியர்கள், காவலர்கள்,முகவர்கள், பத்திரிகையாளர்கள் என பரிசோதனை செய்துகொண்ட 4,368 பேரில் 169 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x