Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

சேலம் மாவட்டத்தில் இதுவரை - விவசாயிகளிடம் இருந்து 8,987 டன் நெல் கொள்முதல் :

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 7 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து தற்போது வரை 8,987 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு கூடுதலாக இலுப்பநத்தம், காடையாம்பட்டி வட்டம் டேனிஷ்பேட்டை என இரு இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது 7 இடங்களில் விவசாயிகளிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங் களில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1,958-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1,918-ம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, சேலம் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், நெல் கொள்முதல் மையங்களில் பூலாம்பட்டி மையத்தில் சன்ன ரக நெல் 1,593 டன், பொது ரகம் 67 டன், தேவூர் மையத்தில் சன்ன ரகம் 1,396 டன், புத்திரகவுண்டன்பாளையம் மையத்தில் சன்ன ரகம் 1,205 டன்,தலைவாசல் மையத்தில் சன்ன ரகம் 1,175 டன், புளியங்குறிச்சி மையத்தில் 1,595 டன், இலுப் பநத்தம் மையத்தில் சன்ன ரகம் 1,026 டன், டேனிஷ்பேட்டை மையத்தில் சன்ன ரகம் 930 டன் என தற்போது வரை மாவட்டத் தின் 7 நெல் கொள்முதல் மையங்களிலும் மொத்தம் 8,987 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 5 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் சன்ன ரகம் 6,969 டன்னும்,பொது ரகம் 113 டன்னும் என மொத்தம் 7,082 டன் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x