Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

தருமபுரி அருகே 14 பேருக்கு கரோனா பாதிப்பு : தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிருஷ்ணகிரி / தருமபுரி

தருமபுரி அருகே ஒரே கிராமத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செக்கோடி கிராமத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. செக்கோடி மோட்டுப்பட்டி கிராமத்தில் மாட்டு வியா பாரிகள் உட்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. செக்கோடி வழியாக பாப்பாரப்பட்டி செல்லும் சாலை மூடப்பட்டது. அப்பகுதியில் இருந்து பொது மக்கள் வெளியே செல்வதற்கும்,வெளி ஆட்கள் உள்ளே செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா, பிடிஓ., விமலன், தண்டபாணி, வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் கரோனா பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கட்டிகானப்பள்ளி

கிருஷ்ணகிரி நகராட்சியை யொட்டி அமைந்துள்ள, கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சத்யசாய் நகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை ஊராட்சி தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் தலைமையில், ஊராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மை பணி மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x