Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

உள் மாவட்டங்களில் 5 டிகிரி வெப்பம் உயரும் :

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக அதிக புழுக்கம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x