Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

மேஷம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது

மேஷம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம். குலதெய்வ வழிபாடுகளை வீட்டில் நடத்துவீர்கள்.ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவீர்கள். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும்.மிதுனம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களை கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.கடகம்: எதையும் சாதித்துக் காட்டும் மனவலிமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும். சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள்.சிம்மம்: வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். வீட்டை மாற்றியமைப்பது குறித்து யோசிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.கன்னி: புதியவர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். மனைவிவழி உறவினரால் நன்மை ஏற்படும்.துலாம்: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.விருச்சிகம்: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாற்றம் ஏற்படக் கூடும்.தனுசு: சுபச்செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.மகரம்: கடன் தொகையை திருப்பிச் செலுத்த வழி பிறக்கும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.கும்பம்: பிரபலங்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.மீனம்: விடா முயற்சியுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பணவரவு திருப்தி தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x