Published : 29 Apr 2021 03:14 am

Updated : 29 Apr 2021 03:14 am

 

Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM

குமரியில் விதிமீறிய கடைகள் மூடல் :

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட நகைக் கடையை பூட்டி சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார அதிகாரிகள் நேற்று மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட வணிக நிறுவனங்கள் அனைத்தையும் மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாகர்கோவில் மீனாட்சிபுரம், கோட்டாறு- பார்வதிபுரம் சாலையில் அதிக பரப்பளவு கொண்ட நகைக் கடைகள் மற்றும் துணிக் கடைகள் செயல்பட்டன.


அங்கு ஆய்வு செய்த சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் அலுவலர்கள் விதிமீறிய கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களை மூடி, சீல் வைத்து நடவடிக்கை மேற் கொண்டனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x