Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

ஏஐபிஇ-15 தேர்வு எழுதியவர்களில் - 4,054 பேருக்கான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு :

ஏஐபிஇ-15 தேர்வு எழுதிய 4,054 தேர்வர்களின் முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் வழக்கறிஞராகப் பணியாற்ற, அகில இந்திய பார் தேர்வில் (ஏஐபிஇ) வெற்றிபெற வேண்டும். ஏஐபிஇ தேர்வுகளை இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2020-ம் ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஏஐபிஇ-15 தேர்வு, நடப்பாண்டு ஜனவரி 24-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் ஏஐபிஇ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், 4,054 தேர்வர்களின் முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஏஐபிஇ-15 தேர்வு எழுதியவர்களில் தவறான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்த காரணத்தாலும், சான்றிதழ்களை முறையாகப் பதிவேற்றம் செய்யாமலும் இருக்கும் சுமார் 1,189 பேர் மற்றும் பிரத்யேக குறியீட்டை (set code) நிரப்பாத 2,865 பேர் என மொத்தம் 4,054 தேர்வர்களுக்கான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டவர்களின் விவரங்கள் https://allindiabarexamination.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, தேர்வு முடிவுகள் வராத தேர்வர்கள் 91-9804580458, 011-49225022, 011-49225023 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு, முறையான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்வர்களின் விளக்கம் பெற்ற பின்னரே நிறுத்திவைக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x