Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

கோவையில் திடீர் மழை :

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. பீளமேடு, ஆவாரம்பாளையம், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், லட்சுமி மில், பாப்பநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், புறநகர் பகுதியிலும் மழை கொட்டியது. சுமார் அரைமணி நேரம் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதன்காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x