Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

கரோனா பரவல் காரணமாக - ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேவை : அம்பத்தூர் மண்டல இபிஎஃப்ஓ ஆணையர் அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக, உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சேவை இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமாக மேற்கொள்ளப்படும் என, அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 26-ம் தேதி முதல் அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் நேரடி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே, தொழிலாளர் வைப்பு நிதியின் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அலுவலகத்துக்கு நேரடியாக வருவதைத் தவிர்த்து, தங்களது வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகளை இணைய வழியாக பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தங்கள் குறைகள் தொடர்பாக 044-2635 0080, 0110, 0120 என்ற தொலைபேசி எண்ணிலும், 7598846548, 7010106930, 7010165291 ஆகிய அலைபேசி எண்களிலும் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ro.ambattur@epfindia.gov.in எனும் இ-மெயில் மற்றும் அம்பத்தூர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முகநூல், ட்விட்டர் பக்கங்கள் மூலமாகவும் தொடர்புக் கொள்ளலாம்.

ஆவணங்களை சமர்ப்பிக்க, அலுவலக வளாக ‘ட்ராப் பாக்ஸ்’ வசதியை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆவணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஒப்புதல் குறுந்தகவல் மூலம் பெற, உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது மொபைல் எண்ணை ஆவணங்களில் தவறாமல் குறிப்பிட வேண்டும் என, அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x